இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அப்படம், அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதாவது திடீரென நடிகர் ரஜினிகாந்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதால் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட உள்ளார்.

டிகர் ரஜினிகாந்த் தொடர்பு 24 மணி நேரத்திற்கு ஐசியூ-வில் கண்காணிக்கப்படுவார் என்றும் அதன் பின் நார்மல் வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி தற்போது ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வந்ததால் நிம்மதியில் ரசிகர்கள் உள்ளனர்.