தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் பிரபாஸ். இவர் 2002-ல் ஈஸ்வரன் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் நடிகராக அறிமுகமானார். பின்னர் இவரது ஆக்ஷன், ரொமான்ஸ் போன்றவற்றின்  மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது. இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர்.

உலகளவில் இவரது ஆறு படங்கள் 100 கோடிக்கும் மேல் ஓபனிங்லே வசூல் செய்த ஒரே இந்திய நடிகர் பிரபாஸ். இந்நிலையில் பிரபாஸின் அடுத்த படத்தில் சஜல் அலி என்ற பாகிஸ்தான் நடிகை நடிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்துள்ளது. சஜல் அலி இவர் ஸ்ரீதேவியின் “மாம்” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகுக்கு அறிமுகமானார்.