போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதால் நடிகர் தனுஷின் மூத்த மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய வீட்டில் வசிக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் வசிக்கும் தனுஷின் மகன்கள் இருவரும் தனுஷ் வீட்டிலும் ரஜினி வீட்டிலும் மாறி மாறி இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் தனுஷின் வீட்டுக்கு வெளியே அவரது மூத்த மகன், அதிகவேக சூப்பர் பைக் ஒன்றை ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 17 வயதாகும் அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. இதனையடுத்து, போலீசார் தனுஷின் மகனுக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர்.