தமிழ் சினிமாவில் சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் அசோக் செல்வன். அதனைத் தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த புகழ் பெற்றுள்ளார். இவர் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களின் திருமணம் வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி எளிமையான முறையில் நடைபெற உள்ளதாகவும் செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.