
நகைக் கடன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பு காரணமாக நகைக் கடன் வழங்கும் முறையில் தடைகள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும், அதனால் பலரும் தங்களது நிதி தேவைக்காக நம்பும் இந்த வசதியில் இருந்து வஞ்சிக்கப்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin… pic.twitter.com/AxVHBqnqNY
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 28, 2025
“>
இந்த சூழலில், நகைக் கடன் கட்டுப்பாடுகளை கண்டித்தும் மத்திய அரசை கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தும் வகையிலும், திமுக சார்பில் வரும் மே 30ஆம் தேதி தஞ்சாவூரில் பெருமளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நகை அடகு கடன் என்பது பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் சிறு வர்த்தகர்கள் வாழ்வாதாரத்தின் ஒரு முக்கிய ஆதாரம் என்பதால், அவர்களை பாதிக்கும் எந்த தீர்வும் முன்னமே பரிசீலிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.