அண்டார்டிகா எல்லையில் இருந்து 1986-ல் உடைந்து நகர்ந்த A23a என்ற பனிக்கட்டி, வெடல் கடலில் தரைதட்டியதுடன் மிகப்பெரிய பனித் தீவாகவும் மாறியது. 4000 கி.மீ சதுர பரப்பளவும், 400 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பனிக் கட்டியானது லண்டர் நகரை விட இருமடங்கு பெரியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது காற்று, கடல்நீரோட்டம் காரணமாக A23a பனிக்கட்டி அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு நோக்கி நகர தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த பனிக்கட்டி தெற்கு ஜார்ஜியா தீவு நோக்கி செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு சென்றால் அங்கு வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.