
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வரலாறு காணாத வெற்றியை கண்டார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற 240 எலெக்ட்ரோல் வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் டொனால்ட் ட்ரம்ப் 270 எலக்ட்ரோல் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கமலஹாரிஸ் 214 எலக்ட்ரால் வாக்குகளை பெற்றார்.
இந்த நிலையில் துணை அதிபர் கமலஹாரிஸ் அதிபர் தேர்தல் தோல்வி மனமார ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் அமைதியான முறையில் அதிகார பகிர்வை ட்ரம்ப் மேற்கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டதை கமலஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.