இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோர்  டீம் இந்தியாவுக்கு ரின்கு சிங் ஃபினிஷராக வரலாம் என்று தெரிவித்துள்ளார்..

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் அதிரடியாக 21 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். இவரது பேட்டிங்கை பார்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்திய அணிக்கு சிறந்த ஃபபினிஷர் கிடைத்துவிட்டதாக தெரிவித்து வருகின்றனர் .

அந்த அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோர் டீம் இந்தியாவுக்கு ரின்கு சிங் ஃபினிஷராக வரலாம் என்று தெரிவித்துள்ளார்.. அவர் கூறியதாவது, வருங்காலத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பழம்பெரும் வீரர் யுவராஜ் சிங் போன்று ரின்கு சிங் ஃபினிஷராக வரலாம். இந்திய அணிக்கு ஆக்ரோஷமான ஃபினிஷராக இருக்கும் திறன் ரிங்குவுக்கு உள்ளது என்று  கூறினார்.  

 மோரே பேசியதாவது, ரிங்கு சிங்கிற்கு டீம் இந்தியாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். அவர் 5 அல்லது 6வது இடத்தில் நன்றாக பேட் செய்ய முடியும். ரிங்கு ஆக்ரோஷமான ஃபினிஷராக பேட் செய்யும் திறன் கொண்டவர். தோனி மற்றும் யுவராஜ் சிங் பேட்டிங்கைப் பார்த்திருப்பீர்கள்; ஆனால் இந்த இரண்டு ஜாம்பவான் வீரர்களும் ஓய்வு பெற்ற பிறகு அவர்களைப் போன்ற ஒரு வீரர் நமக்கு கிடைக்கவில்லை. சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது; ஆனால் அவரால் ஃபினிஷராக ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை” என்றார்.