தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை தேடி மருத்துவத் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இதன் மூலம் தற்போது 1.6 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

அதே சமயம் நான்கு கோடிக்கும் அதிகமான மக்கள் பலமுறை சேவைகளை பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் அடுத்த இலக்கு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை கவனம் செலுத்துவது என செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி தொழிலாளரை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்கி செயல்படுத்தும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.