நடிகை பூஜா ஹெக்டேவின் பாட்டி காலமானார். தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி, பீஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  தற்போது விஜய்யுடன் ஜனநாயகன்  படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் ரெட்ரோ படத்திலும் நடித்துள்ளார். அக்டோபர் மாதம் ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இவர் விமானத்திற்குள் செல்போனை தொலைத்து விட்டு தேடும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை நடிகர் வருண் தவான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து செல்போனை கண்டுபிடித்து கொடுத்ததற்காக உன்னை மன்னித்து விடுகிறேன் என்று சிரிப்போடு பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார்.