இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 21,413 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2292 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு: 18 வயது முதல் அதிகப்படியாக 40 வயது வரை இருக்கலாம்.  ஓபிசி பிரிவினருக்கு மூன்று வருடங்கள் குறையும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வயது தளர்வு உள்ளது.

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. தமிழ் மொழியை தெரிந்து இருக்க வேண்டும். கணினி, சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 12 ஆயிரம் முதல் -29,350 வரை. உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு பத்தாயிரம் முதல் 24,470 வரை

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்காணல் கிடையாது. விண்ணப்பதாரர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://indiapostgdsonline.gov.in/

விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 10. 2.2015

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.3.2025