தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர் மாயவன் கூறுகையில், ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம் என்று திமுக வாக்குறுதி அளித்த நிலையில் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியும் எதையும் நிறைவேற்றவில்லை.

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்யவில்லை என்றால் ஜாக்டோ ஜியோ அமைப்புகளோடு சேர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.