தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று ஒரே  கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது. கோவையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் இதில் சோகமான விஷயம் என்னவென்றால் பலரின் பெயர்கள் விடுபட்டுள்ளது.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாத நிலையில் எந்த அடிப்படையில் இவர்களின் பெயர்கள்  இடம்பெறவில்லை என்பது தெரியவில்லை. ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் 830 பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இத்தனை பேரின் பெயர்கள் விடுபட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் என்ன பணி செய்தார்கள் என்பது தெரியவில்லை. அதோடு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி மக்கள் உற்சாகமாக வந்து வாக்கு செலுத்தியுள்ளார்கள் என்று கூறினார்.