தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 10 வருடங்களாக அமைச்சராகவும் முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியில் தற்போது 3000-க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ள நிலையில் அவர் தன்னுடைய சொந்த தொகுதிக்காக கூட எதுவும் செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. அதனால்தான் இப்படி உளறிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மக்கள் வழியில் மக்கள் நலனுக்காக பயணிப்பார் என்றார். மேலும் 2026-ல் அதிமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.