தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யை, நடிகர் விஷால் காப்பி அடிப்பதாக சமூக வலைதளங்களில் தற்போது கருத்துக்கள் பரவி வருகிறது. அதாவது நடிகர் விஜய்யை இளைய தளபதி என்று அழைக்கும் போது விஷால் புரட்சி தளபதி என போட்டுக் கொண்டார். அதன் பிறகு நடிகர் விஜய் 2026-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து தமிழக வெற்றி கழகம் என்ற பெயரின் புதிய கட்சியினை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நடிகர் விஷாலும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்ததோடு புதிய கட்சி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவித்தார். இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஷால் சைக்கிளில் வந்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் வாக்களிப்பதற்காக சைக்கிளில்  வந்த நிலையில் தற்போது அவரது பாணியில் நடிகர் விஷாலும்  சைக்கிளில் வாக்களிக்க வந்துள்ளார். மேலும் இதனால் நடிகர் விஜயை விஷால் காப்பியடிப்பதாக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.