மனிதர்களாகிய நாம் பிறரிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள மொழியை பயன்படுத்துகிறோம். இதேபோல், தேனீக்கள், மற்ற தேனீக்களுடன் தொடர்பு ஏற்படுத்தவும், பூக்கள் இருக்கும் இடங்களை பிற தேனீக்களுக்கு தெரியப்படுத்தவும் நடனம் ஆடுமாம். தேனீக்கள் பல விசித்திர குணங்களைக் கொண்டுள்ளன. உலகின் மிகச்சிறந்த இயற்கை மருத்துவ பொருளாக தேன் கருதப்படுகின்றது.

ஒரு தேன் கூட்டில் குறைந்தபட்சமாக 80 ஆயிரம் தேனீக்கள் இருக்கும். அதில் ஒரே ஒரு ராணி தேனீ மட்டும்தான் இருக்கும். 250 க்கும் அதிகமான ஆண் தேனீக்கள் இருக்கும். அதில் ஆண் தேனீக்கள் 90 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். ஆனால் ராணி தேனி இரண்டிலிருந்து ஏழு நாட்கள் வரை உயிருடன் இருக்கும். இதில் இருக்கும் வேலைக்கார தேனீக்கள் அதிகபட்சமாக 42 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்.