தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே குவித்தார்.‌ இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தியில் பேபி ஜான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் ஹீரோவாக நடித்துள்ளார். அதன்பிறகு இவர்களுக்கு மகளாக பேபி சாரா நடித்துள்ளார். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தாமன் இசையமைத்துள்ளார். இது தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரித்துள்ளார். மேலும் தற்போது இந்த படத்தின் அதிரடியான ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களை கவர்ந்து  சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.