தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக வாக்குச்சாவடி மையத்தில் காவல்துறையினரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் செய்துவருகின்றனர்.

மேலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது வரை சீல் வைக்கப்படவில்லை. தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தலைமையில் அதிமுகவினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.