தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் சார்பில் நேற்று 21ஆம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நடிகர் சிவகுமார், முத்துலிங்கம், செங்குட்டுவன் மற்றும் கதாசிரியர் கலைமணி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவில் மூத்த எழுத்தாளரான காரைக்குடி நாராயணனுக்கு இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் மாலை வணங்கி கௌரவித்துள்ளார்.

இதையடுத்து எழுத்தாளர் நாராயணன் 203 கதைகளை எழுதி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கதாகும். இதைத்தொடர்ந்து பெப்சியின் கீழ் திரைப்பட எழுத்தாளர் சங்கம் செயல்பட்டு வருவதுடன் தற்போது இந்த சங்கத்தின் தலைவராக இயக்குனர் பாக்கியராஜ் உள்ளார். திரைப்பட சங்கத்தை பொருத்தவரை 2 வருடத்திற்கும் ஒருமுறை சங்கத் தலைவரை தேர்ந்தெடுப்பது வழக்கம்.

இந்நிலையில் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவரான இயக்குனர் பாக்கியராஜின் தலைமை காலம் செப்டம்பர் மாதத்தோடு முடிவடைய இருக்கிறது. இதனால் புது தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடத்தயிருக்கும் நிலையில் பெப்சி புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இதனால் இந்த இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடத்த வேண்டாம் எனவும் இருக்கும் தலைவரின் பதவி காலத்தை நீட்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் இயக்குனர் பாக்கியராஜ் 3-வது முறையாக திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.