தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வருகிற 28ஆம் தேதி 48-வது பிறந்தநாள் வர இருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் முதன்  முதலில் குருவி என்ற திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமான நிலையில் அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நடித்த உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சியில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட நிலையில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் உதயநிதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுகவினர் தயாராகி வரும் நிலையில் அதற்கான கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இன்று திமுக வர்த்தக அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது  நவம்பர் 27 முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை சிறப்பான முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளின் போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.