மலையாள நடிகர் திலீப் உடன் நடிகைகள் நிகிலா விமல் மற்றும் டியானா ஹமீத் ஆகியோர் கத்தாரில்  நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் மேடையில் இணைந்து நடனமாடியுள்ளார்கள். இந்த வீடியோவில் கிறிஸ்டியன் பிரதர்ஸ் படத்திலிருந்து “கர்த்தாவே நீ கற்பிச்ச போல்” என்ற பாடலுக்கு மூன்று பேரும் கவர்ச்சிகரமான நடனமாடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

திலிப் 2017 ஆம் வருடம் நடைபெற்ற மலையாள நடிகை பாலியல் வன்முறை வழக்கில் 8  குற்றவாளியாக இருக்கிறார். இந்த வழக்கானது இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடைசி விசாரணை அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. திலீப் “பவி கேர் டேக்கர்” என்ற படத்தில் கடைசியாக நடித்தார். பிரின்ஸ் அன்ட் ஃபேமிலி என்ற படம் அடுத்து ரெடியாகி வருகிறது. இந்த நிலையில் நிகிலா விமலோடு மேடையில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளார்கள்.