திருமணம் மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் சிறப்பு அனுமதி வாங்கி மதுபானங்களை குடிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மது விலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்தலாம் என்ற அறிவிப்பிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது “திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதிப்பது என்பது பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும். விளையாட்டு மைதானங்களில் மது அருந்துவதால் வன்முறைக்கு வழிவகுக்கும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.