
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பலாமூ மாவட்டத்தில் ரிங்கி குமாரி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5-ம் தேதி மந்து குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடந்து முடிந்த பிறகு கடந்த 9-ம் தேதி மந்து தன்னுடைய மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக ரிங்கி அந்தப் பகுதியை சேர்ந்த அபிமன்யு குமார் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து ரிங்கியை மந்துவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ரிங்கி அதன் பிறகு வீட்டிற்கு திரும்பவே இல்லை. அதாவது தன் கணவன் மற்றும் தாயாரை ஏமாற்றிவிட்டு காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து இருவரையும் கண்டுபிடித்த நிலையில் ரிங்கி தன் காதலனுடன் தான் செல்வேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதில் ரிங்கிக்கு 18 வயது நிறைவடைந்து விட்டதால் அவருடைய முடிவை மாற்ற முடியாது என போலீசார் கூறிவிட்டனர். இதனால் திருமணமான 7 நாளில் புது மாப்பிள்ளை மனவேதனையுடன் தன் வீட்டிற்கு திரும்பினார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.