இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று  ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதனை தொடர்ந்து திருப்பதியில் 10 இடங்களில் 100 கவுண்டர்கள் அமைத்து ஐந்து லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.

அதனைப் போலவே நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின் முறைப்படி திருப்பதி வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட் இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.