திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதி மற்றும் கொல்லம் இடையே கோவை வழியாக வாரம் இரண்டு முறை ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதி முதல் புதிய ரயில் சேவை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொல்லத்தில் இருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு காவன் குளம், மாவேலிக்கரா, பாலக்காடு வழியாக மாலை 6.32 மணிக்கு கோவை வந்தடையும்.

அதன் பிறகு மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் சித்தூர் வழியாக திருப்பதிக்கு அதிகாலை 3.20 மணிக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்றடையும். அதனைப் போலவே செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருப்பதியில் இருந்து பகல் 2.40 மணிக்கு புறப்படும் ரயில் சித்தூர், காட்பாடி, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் வழியாக கோவைக்கு இரவு 10.12 மணிக்கு வந்து அடையும். அதன் பிறகு 10.15 மணிக்கு புறப்பட்டு கொல்லத்துக்கு காலை 6.20 மணிக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சென்றடையும். இந்த புதிய ரயில் வருகின்ற மார்ச் 15ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.