
விஜயின் தமிழக வெற்றி கழக மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் தனது அரசியல் கொள்கைகள் பற்றி மக்களிடம் விரைவாக பேசிக் கொண்டிருக்கிறார். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என கூறி ஏமாற்றுகிறார்கள். குடும்ப அரசியல் செய்து ஊழலில் ஈடுபடும் கட்சி தான் அரசியல் எதிரி. தமிழக வெற்றி கழக மாநாட்டில் விஜய் பேசினார்.