திமுக நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். இதில் மூத்த நிர்வாகிகள் பலர் மீண்டும் போட்டியிடுவதாக உத்தேச பட்டியல் மூலம் அறியப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக 10க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பல வாரிசுகளின் பெயர்கள் இடம் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.