ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தபோது “திராவிட மாடல் ஆட்சியின் 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன. திமுக ஆட்சியின் முறைகேடுகள் பற்றி தமிழ்நாடு ஆளுநரிடம் புகார் மனு அளித்தோம். நேர்மையாக செயல்படக்கூடிய அதிகாரிகள் திமுக அரசில் பாதிக்கப்படுகின்றனர்.

கள்ளச்சாரயமும், போலி மதுபானமும் அரசுக்கு தெரிந்தே விற்கப்படுகிறது. ரவுடிகள், குற்றவாளிகள், திருடர்கள், காவல்துறையினருக்கு அச்சப்படுவதில்லை. வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை ஒரு குற்றவாளியை கூட கைது செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார்.