கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா (92) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்த இவர் மத்திய வெளியுறவு அமைச்சராகவும் மகாராஷ்டிரா ஆளுநராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் உடனான தனது 50 ஆண்டுகால தொடர்பை முடித்துக்கொண்டு 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவர் தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார்.