தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதாவது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் தான் கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது.

அந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனை தான் காதலிப்பது ஆகவும், அவர்தான் குழந்தைக்கு தந்தை எனவும் சிறுமி கூறியுள்ளார். இது தொடர்பாக வல்லம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மேலும் 9-ம் வகுப்பு சிறுமி தாயான நிலையில் அதற்கு தந்தை 10-ம் வகுப்பு சிறுவன் என்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.