நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை (மே 23) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 20,000 மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் தவறான முறையில் 2,000 நோட்டுகளை மாற்றினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் எச்சரித்துள்ளார். 2,000 பணப் பரிவர்த்தனையில் தேசிய வங்கிகளுக்கான விதிமுறையே கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். கடந்த காலத்தில் பணமதிப்பிழப்பு செய்தபோது, அதிமுக அரசு கூட்டுறவு வங்கிகள் பணத்தை மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதே தவறு தற்போது நடக்காது என்றார்.