தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது ஊரகப் பகுதிகளில் பொதுமக்களை மனை பிரிவுகள், கட்டடம், தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்துவதற்கான அனுமதி ஒற்றைச் சார்ந்த முறையில் இணையதளம் மூலம் வழங்கப்படும் எனவும் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழியில் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் எனவும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில் கிராம ஊராட்சிகளில் இன்று முதல் ஆன்லைன் மூலம் வரி வசூல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் கிராம ஊராட்சிகள் மக்களிடமிருந்து எந்த ஒரு பணத்தையும் ரொக்கமாக பெறக் கூடாது. ஆன்லைன் மூலம் மட்டுமே பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி வீடு, சொத்து மற்றும் குடிநீராகிய வரிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். மேலும் புதிய கட்டடங்களுக்கு அனுமதியும் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.