தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் எஸ் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் தளபதி 69. அனிருத் இசையமைக்கும் இந்த படம் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பட குழு பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலைட் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பொங்கல் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படம் தான் விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.