பொதுவாக தலைவலி என்பது உடலின் உள்ளே இருந்து மனிதனை கொல்லக் கூடிய மிக பலமான ஆயுதமாகும். தலைவலி வந்துவிட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. இந்த தலைவலி என்பது நாம் உண்ணும் உணவு நமக்கு ஒத்துப் போகவில்லை என்றாலும் இது வரும். சில நோய்களுக்கு அறிகுறியாகவும் இது இருக்கும். தலைவலி ஏற்படுவதற்கான காரணத்தை குறித்து இதில் பார்க்கலாம்.

நம்முடைய மூக்கின் வளைவு பகுதியில் ஜவ்வில் வீக்கம் இருந்தால் அடிக்கடி தலைவலி வரும். இந்த பிரச்சனையை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே சரி செய்ய முடியும்.

கண்களின் பார்வை திறன் குறைவாக இருந்தாலும் தலையின் பின்பக்கம் வலி இருக்கும். கண்களில் நீர் அழுத்தம் அதிகமானால் தலைவலி வரும்.

சிலருக்கு ஒற்றைத் தலைவலி வருவதற்கான காரணம் மூளையின் ரத்த ஓட்டம் சீராக அமையாது. இந்த பிரச்சனை நீண்ட நாட்களுக்கு மாறாமல் அப்படியே இருக்கும். இதற்கு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. நரம்பியல் நிபுணர்களை பார்த்து சிகிச்சை பெற வேண்டும்.

இரவில் கண் விழித்தே நித்திரையை தொலைப்பவர்களுக்கு தலைவலி அதிகம் வரும். சில நேரங்களில் தலையில் அடிபட்டு அதனை கவனிக்காமல் விடுவதால் அவர்களுக்கு விட்டு விட்டு தலைவலி வரும். இந்த பாதிப்புக்கான காரணத்தை அறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும்.

தீராத தலைவலி இருப்பவர்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு மூளையில் நீர்கட்டி மற்றும் புற்றுநோய் கட்டி உருவாக அதிக வாய்ப்பு உள்ளது.

வைரஸ் காய்ச்சலுக்கும் தலைவலி என்பது ஆரம்ப அறிகுறியாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு குறைந்தாலும் உப்பு அளவு கூடி அல்லது குறைந்தாலும் அளவுக்கு அதிகமான தலைவலி வரும்.

இந்த தலைவலியை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் கடைகளில் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி எடுத்துக் கொள்ளும் போது நாளடைவில் அவர்கள் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

மன அழுத்தத்தின் காரணமாக கூட தலைவலி வரும். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் பட்டினி கிடப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை அதிகம் வர வாய்ப்புள்ளது. எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு இனி அந்த தவறை செய்யாமல் உங்கள் தலைவலி பிரச்சனையை சரி செய்து கொள்ளுங்கள்.