சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், ரசிகர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்போது வரை சினிமா துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் ஆரம்ப கால கட்டத்தில் பல தடைகளையும் தோல்விகளையும் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

இப்போதும் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் ரஜினிகாந்த் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.