தமிழ் சினிமாவின் 80களில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர் நளினி.  இவர் முன்னணி நடிகராக ஜொலித்த ராமராஜனை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டா.ர் 1987 ஆம் வருடம் எம்ஜிஆர் தலைமையில் இந்த திருமணம் கோலாகலமாக நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளார்கள். இனிமையாக போய்க்கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கை 2000 வருடம் முடிவுக்கு வந்தது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இதுவரை இருவரும் எந்த ஒரு இடத்திலும்  ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டதே கிடையாது. அதிலும் நளினி இப்போதும் ராமராஜன் மீது எனக்கு காதல் இருக்கிறது. அவர் கொடுத்த காதல் கடிதத்தை எப்போதும் பத்திரமாக   வைத்திருக்கிறேன் என்று பெருமையாக சொல்லி இருக்கிறார்.

இந்நிலையில் அவர்கள் பிள்ளைகளே இருவரையும் சேர்த்து வைத்து விட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. இதனை ராமராஜன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “நடக்காத ஒரு விஷயத்தை திரித்து பேசுவது யாருக்கு அப்படி என்ன ஆனந்தமோ? தெரியவில்லை. எப்படி வேணாலும் பேசட்டும். ஆனால் இல்லாத விஷயத்தை இனிமேல் நடக்கவே முடியாத ஒரு விஷயத்தை இட்டுக்கட்டி பேசுவதை ஏற்க முடியவில்லை. இப்போது வெளியாகும் இதுபோன்ற வதந்திகளால் இருவருடைய மனமும் புண்படும் என்பது தெரியாதா? இதுவே எனக்கு மன வேதனை ஏற்படுகிறது. முடிந்தது முடிந்து போச்சு. இனி அதில் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கும் நளினிக்கு எல்லாமே முடிந்து விட்டது தயவு செய்து சேர்ந்து விட்டோம் என்ற வதந்தியை பரப்பாதீர்கள்” என்று கூறியுள்ளார்.