மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர்  தான் மடோனா செபாஸ்டியன்.  தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த “காதலும் கடந்து போகும்” படத்தில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலமாக நல்ல வரவேற்பு பெற்றார். தொடர்ந்து கவண், பவர் பாண்டி, வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நடித்தார். லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் மடோனா செபாஸ்டியன் அளித்த பேட்டியில், ” தமிழ் மொழி குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.  அதாவது, “எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும். எனக்கு தமிழ் மொழி மீது அளவற்ற பாசம் இருக்கிறது. அதனால் நான் தமிழ் அதிகமாக பேச மாட்டேன். அப்படி பேசினால் கரெக்டாக பேச வேண்டும் என்று நினைப்பேன். அது தப்பாகி விடக்கூடாது. அதனால் நான் என்னை கண்ட்ரோல் பண்ணிக் கொள்வேன்” என்று கூறியுள்ளார்.