
புஷ்பா 2 படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜுனும் பங்கேற்று இருந்தார். நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் பேசிய போது ரசிகர்கள் அவரை தெலுங்கில் பேசுமாறு அறிவுறுத்தி உள்ளனர். அதற்கு அல்லு அர்ஜுன் கூறிய பதில் அனைவரது கைதட்டலையும் பெற்றுள்ளது.
அப்படி தெலுங்கில் பேச சொல்லிய ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் கூறிய பதில் ” தமிழ்நாட்டுக்கு வந்தா நாம தமிழ்ல தான் பேசணும். அதுதான் நாம இந்த மண்ணுக்கு தரும் மரியாதை. நாம எந்த மண்ணுல இருக்கோமா அந்த மொழியில பேசணும் மொழி தெரிஞ்சா. ‘Wherever We Stand, Pay Respect To That Land’ “