தமிழகத்தில் யாரும் அறிந்திராத ஒரு அழகிய மலை கிராமம் உள்ளது. ஆம் தெங்குமரஹடா என்ற இந்த தனித்தீவில் வெளி ஆட்களுக்கு கட்டாயம் அனுமதி கிடைக்காதாம். அப்படி என்ன அதிசயம் என்றால் அதிசயம் மிகுந்த அழகிய இந்த மலைவாழ் கிராமம் மாயாறு என்ற நதிக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நதியில் எப்பொழுது நீர் வரத்து அதிகமாக இருக்கும்? எப்பொழுது குறையும் என்பதை இங்கு வசிக்கும் உள்ளூர் மக்களே கணிக்க முடியாது என்று கூறுகிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் சந்தன மரக்கடத்தல் வீரப்பனால் இந்த கிராமம் ஆளப்பட்டது என்று கூறப்படுகிறது. ஒரு பக்கம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயமும், மறு பக்கம் முதுமலை புலிகள் சரணாலயம் சூழ அதற்கு மத்தியில் இந்த தீவு அமைந்துள்ளது. இதனால் தான் இங்கு வெளி ஆட்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. வனவிலங்குகளுக்கு எந்த ஒரு தொந்தரவும் ஏற்படக்கூடாது என்பதற்காக உள்ளூர் மக்கள் தவிர இங்கு யாரும் வர முடியாது.

ஆனால் இங்கு நமக்கு தெரிந்த நண்பர்களும் அல்லது உறவினர்களோ யாராவது வசித்தால் அவர்களோடு சுற்றி பார்க்க செல்லலாம். ஆனால் அதற்கும் அனுமதி பெற வேண்டும். அங்கு இருக்கும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாத விதமாக பாதுகாக்கப்பட்ட காடுகளின் வழியாக வனத்துறை சபாரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு செல்ல ஆசைப்படுபவர்கள் ஒருவருக்கு 650 ரூபாய் கட்டணம் செலுத்தி சுற்றி பார்க்கலாம்