தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக “அனைவருக்கும் இ-சேவை” எனும் திட்டத்தின் கீழ் 13,336 இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு இ-சேவை பயனர் குறியீடு வழங்கும் நிகழ்ச்சியானது மதுரையில் நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று இ-சேவை பயனர் குறியீடு வழங்கினார்.

இதையடுத்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது, கிராமப்புறங்களில் அதிகளவில் இ-சேவை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ-சேவை மையங்களால் பொதுமக்களின் அலைச்சல் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இணையசேவை வசதியானது 89 சதவீதத்தில் இருந்து 93 சதவீதம் ஆக உயர்ந்து இருப்பதாக மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்,