நாடு முழுவதும் சமீபத்தில் பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு A H3n2 வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது உயிருக்கு ஆபத்தான வைரஸ் கிடையாது. சாதாரண பாரசிட்டமல் மாத்திரையை இதற்கு போதுமானது. மேலும் அதிக நீரை அருந்துவது, முக கவசம் அணிவதன் மூலமாக தொற்று பரவலை தடுக்கலாம் என்று ஐ சி எம் ஆர் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் இதை கட்டுப்படுத்தும் வகையில், சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படுவதால் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது என கூறியுள்ளார்.