கர்நாடக மாநிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அங்குள்ள ஷிவமொக்கா நகரில் பாஜக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழ் தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. அப்போது பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா திடீரென சத்தமாக குரலை உயர்த்தி தமிழ் தாய் வாழ்த்தை நிறுத்த சொல்லிவிட்டு கர்நாடகா கீதத்தை ஒலிக்குமாறு கூறினார்.

அப்போது மேடையில் நின்ற தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தமிழ் தாய் வாழ்த்து இழிவு படுத்திய தன் கட்சிக்காரர்களை கூட தடுக்க முடியாத அண்ணாமலை அவர்கள் தமிழ் மக்களை பற்றி எப்படி கவலைப்படுவார். இதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என பதிவிட்டு இருந்தார். இதற்கு தற்போது அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அதாவது முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றினார். அதன் பிறகு தேசிய கீதம் ஒலிபரப்பப்படவில்லை.

தேசியக்கொடியை இயற்றிய ஏற்றிய பிறகு தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும். தேசியக்கொடி ஏற்றிய பிறகு தேசிய கீதம் ஒலிபரப்ப வேண்டும் என்று கூட தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு நீங்கள் இதை எல்லாம் பேசலாமா.? அடித்து புரள இது ஒன்னும்  திமுக மேடை கிடையாது. ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகு தான் வேறு மாநிலத்தின் கீதம் ஒலிபரப்பப்படும் என்பதுதான் நியதி. அதைத்தான் பாஜக எம்எல்ஏவும் செய்தார். தமிழ் மக்களை உங்களிடம் இருந்தும் திமுகவின் மலிவான அரசியலில் இருந்து காப்பாற்றுவதும் தான் எங்களுடைய ஒரே பணி என்று கூறியுள்ளார்.