தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழகத்தில் முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய பரிந்துரைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், மருத்துவத்துறையினர் தேங்காய் எண்ணையை சமையலுக்கு பரிந்துரைக்கின்றனர். கேரளத்தில் அனைத்து தேவைகளுக்கும் தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே விரைவில் தேங்காய் எண்ணெய் ரேஷன் கடையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.