நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் இன்று அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுவதால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது.

அதற்காக குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நுகர்வோர்கள் அதிகம் ஆர்வம் செலுத்தவில்லை. இதனால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல்களை சந்திக்க கூடும் என மின்வாரியம் எச்சரித்துள்ளது. எனவே இதுவரை மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காத பயனர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் இந்த சேவைகளை முடிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.