தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரளா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த இரு தினங்களாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனைடுத்து இன்று திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி கோவை மாவட்டம் மலைப்பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள.