
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னைக்கு திரும்பி விட்டார். அவர் லண்டனில் தனது படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, பாஜக புதிய கட்சிகளுக்கு பயப்படாது. நடிகர் விஜய் அக்டோபர் மாதத்திற்கு பிறகு எத்தனை முறை வெளியில் வந்திருக்கிறார்.
திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார். திமுகவும் ஆம் ஆத்மியும் வித்யாசமான பாதையில் இந்தியாவில் பயணிக்கிறது. திராவிட கட்சிகளின் வாக்கு மூன்றாக பிரிகிறது என்றே பார்க்கிறேன். அண்ணன் சீமானின் பாதை வேறு. பாஜகவின் பாதை வேறு. 2026 தேர்தல் சரித்திர தேர்தலாக அமையும் என கூறியுள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகையை பாஜக சார்பில் வரவேற்கிறோம். தீவிர அரசியலுக்கு விஜய் வரும் போது, பாஜக தனது கருத்தை தெரிவிக்கும். விஜய்யின் அரசியல் வருகையால் தமிழக மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.