
அதிமுக உடனான கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என தேர்தலுக்கு முன்னரே அறிக்கை கொடுத்து இருந்தார் நிர்மலா சீதாராமன். இதனால் தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவருக்கும் இடையே உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பாஜக நிலை குழுவின் உறுப்பினரான பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் மேலிட பொறுப்பாளரான பியூஸ் கோயல் அறிக்கைக் கேட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தால் பல இடத்தில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறிய நிலையில் இந்த அறிக்கையானது கேட்கப்பட்டுள்ளது.