தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தலைமைச் செய்தலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் உள்ளிட்ட தெரு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இறையருள் பெற திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பது தான் அன்னதானத் திட்டம்.

தற்போது இந்த திட்டத்தில் எட்டு திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும் 756 திருக்கோயில்களில் மதிய வேலை அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக சுமார் 82,000 பக்தர்கள் பயன் பெறுவதோடு இந்த திட்டத்திற்கு வருடம் தோறும் 18 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படும்.