தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் நலனுக்காக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இளைஞர்களின் ஒரே கோரிக்கையாக இருப்பது வேலை வாய்ப்பு வேண்டும் என்பதுதான் என சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு உத்திரவாதம் வழங்கும் விதமாக முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அரசு சார்பில் பயிற்சி திட்டங்களை வழங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த பயிற்சி HCL, L&T, TCS ஆகிய நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பயிற்சி நிலையங்கள், பாலிடெக்னிக் மற்றும் பிற தொழில்முறை படிப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கைவினை திறன் பள்ளிகள் அறிமுகம் செய்யப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்