தமிழகத்தில் போக்குவரத்து துறையில் தனியார் மையம் இல்லை என்று அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், கட்டணமில்லா பேருந்துகள் மூலம் பெண் பயணிகளின் எண்ணிக்கை 64.65% ஆக உயர்ந்துள்ளது. தமிழக பொது போக்குவரத்தினை நாட்டின் முதலாவது இடத்திற்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம். அரசின் வழித்தடத்தில் தனியார் பேருந்து இயக்கப்படும் தவிர தனியாருக்கு வழித்தடம் தரப்படவில்லை.

மேலும் அரசு விரைவு பேருந்தில் அளிக்கப்படும் சலுகை குறித்து சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு ஆறாவது பயணம் முதல் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.